உள்துறை அமைச்சகம்
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை
प्रविष्टि तिथि:
04 AUG 2026 3:25PM by PIB Chennai
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைத் தடுக்க 'பூஜ்ய சகிப்புத்தன்மை' கொள்கையின் கீழ் மத்திய அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 2026-2029 காலக்கட்டத்திற்கான போதைப்பொருள் கட்டுப்பாட்டு தொலைநோக்கு ஆவணம் கடந்த ஜூன் 26 அன்று வெளியிடப்பட்டது. மத்திய, மாநில முகமைகளை ஒருங்கிணைக்க 4 அடுக்கு நார்கோ-ஒருங்கிணைப்பு மைய (கட்டமைப்பு மற்றும் இணையவழி போர்டல் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்கள் போதைப்பொருள் தொடர்பான புகார்களை அளிக்க 'மனஸ்' (MANAS - 1933) என்ற 24 மணி நேர கட்டணமில்லா உதவி எண் தொடங்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களைச் சுற்றி 500 மீட்டர் தொலைவிற்குப் போதைப்பொருள் அற்ற மண்டலமாக உருவாக்குதல், டார்க்நெட் மற்றும் கிரிப்டோகரன்சி மூலம் நடைபெறும் சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுக்கச் சிறப்புத் தொழில் நுட்பப் பிரிவுகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294237®=3&lang=1
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2294646)
आगंतुक पटल : 7