பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

15-வது நிதிக் குழுவின் நிபந்தனைக்குட்பட்ட மானியங்களின் பயன்பாடு

प्रविष्टि तिथि: 04 AUG 2026 4:16PM by PIB Chennai

ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, 15-வது நிதிக் குழுவின் குறிப்பிட்ட நோக்கத்திற்கான மானியங்களை செயல்படுத்துவதற்கான முதன்மைத் துறையாகச் செயல்படுகிறது. இந்தக்  குழு தனது அறிக்கையை இரண்டு கட்டங்களாகச் சமர்ப்பித்தது- 2020-21 நிதியாண்டிற்கான இடைக்கால அறிக்கை மற்றும் 2021-26 காலகட்டத்திற்கான இறுதி அறிக்கை.

 

இந்தக் குழு, 28 மாநிலங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு (RLBs), 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்திற்கு ரூ. 2.36 லட்சம் கோடியைப் பரிந்துரைத்துள்ளது. இதில், பஞ்சாயத்துகள் தேவையில்லாத பகுதிகளும் அடங்கும்.

 

15-வது நிதிக் குழுவின் கால அளவு 31.03.2026 அன்று நிறைவடைந்ததை அடுத்து, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைக்கான உரிமை காலாவதியானது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீர் மற்றும் சுகாதாரம் சார்ந்த பணிகளுக்காக வழங்கப்படும் 16-வது நிதிக் குழுவின் குறிப்பிட்ட நோக்கத்திற்கான மானியத்தைப் பயன்படுத்துவது குறித்து, மாநிலங்களுக்குக் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

 

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங், இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294282&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2294595) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी