பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு

प्रविष्टि तिथि: 04 AUG 2026 3:17PM by PIB Chennai

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத் (CAT) தலைவர் நீதிபதி ரஞ்சித் வசந்த்ராவ் மோரே, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைக்கான இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்தார். அப்போது, நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள், பரந்த அளவிலான அணுகுமுறை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவை வழங்கல் ஆகியவற்றின் மூலம் நிர்வாக ரீதியான நீதியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தீர்ப்பாயத்தின் சமீபத்திய முன்முயற்சிகள் குறித்து அவரிடம் விளக்கினார்.

 

தீர்ப்பாயம் தொடங்கப்பட்டதிலிருந்து தீர்ப்பளிப்பதற்காக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பெறப்பட்டு, அவற்றில் சுமார் 9.32 லட்சம் வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 93 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் தீர்த்துவைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி மோர் அமைச்சரிடம் தெரிவித்தார்.

 

பொது நிறுவனங்களை அதிக வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் குடிமக்களை மையப்படுத்தும் அணுகுமுறை கொண்டவையாக மாற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். நிர்வாக ரீதியிலான நீதி என்பது நல்லாட்சியின் ஒரு முக்கிய அங்கமாகும் என்றும், நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் சேவைகளை எளிதாக அணுகவும், செயல்திறன் மற்றும் சேவை வழங்கலில் எளிமையையும் இந்தச் சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்முறை எளிமையாக்கல் ஆகியவற்றிற்கு அளிக்கப்படும் வலுவான முக்கியத்துவத்தின் காரணமாகவே பொது நிறுவனங்களில் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக அமைச்சர் கூறினார். டிஜிட்டல் தளங்கள், நிறுவனங்கள் சேவைகளை விரைவாக வழங்கவும், பொறுப்புடைமையை மேம்படுத்தவும், நடைமுறைத் தாமதங்களைக் குறைக்கவும் உதவுவதாகவும், அதன் மூலம், நிர்வாகம்,  குடிமக்களின் தேவைகளுக்கு ஏற்ப மேலும் பதிலளிக்கக்கூடியதாக மாறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், அதன் விரிவடைந்து வரும் டிஜிட்டல் கட்டமைப்பு, வலுப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் வழக்குகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவை, அரசு மேற்கொண்டு வரும் நிர்வாகச் சீர்திருத்தங்களின் பரந்த நோக்கத்தை பிரதிபலிப்பதாகக்  கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294230&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2294536) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu