ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுர்வேத தினம் மற்றும் நோய்த் தடுப்பு முன்முயற்சிகளை ஊக்குவித்தல்

प्रविष्टि तिथि: 04 AUG 2026 3:05PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) முதன்மை நிறுவனமாகச் செயல்பட, 10-வது ஆயுர்வேத தினம், 2025 செப்டம்பர் 23 அன்று கொண்டாடப்பட்டது. முழுமையான ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், "மக்கள் மற்றும் பூமியின் நலனுக்கு ஆயுர்வேதம்" என்ற கருப்பொருளில் இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

 

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் இலவச மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை வழங்கும் ஆயுர்வேத மருத்துவ முகாம்கள்; தொற்றா நோய்கள், முதியோர் பராமரிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த கோளாறுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சிறப்பு முகாம்கள் முதலியவை  அடங்கும்.

 

ஆயுர்வேத தினம் 2025-ஐ முன்னிட்டு, 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆயுர்வேத மருத்துவ முகாம்கள், மருத்துவப் பரிசோதனை மற்றும் மக்கள் தொடர்புத் திட்டங்கள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், இணையவழி கருத்தரங்குகள் (வெபினார்கள்), யோகா அமர்வுகள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

 

 மத்திய ஆயுஷ் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ், இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294224&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2294534) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali