பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கல்வியாளர் திரு டி.ஒய். பாட்டீல் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்

प्रविष्टि तिथि: 04 AUG 2026 3:57PM by PIB Chennai

பிரபல கல்வியாளரும் சமூகச் சேவகருமான திரு டி.ஒய். பாட்டீல் அவர்களின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு டி.ஒய். பாட்டீல் அவர்கள் ஏழை எளிய மக்களின் நல்வாழ்விற்காகத் தொடர்ந்து பாடுபட்டவர் என்று பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:

"கல்வித் துறையிலும் சமூகப் பணியாற்றுவதிலும் திரு டி.ஒய். பாட்டீல் அவர்கள் முன்னோடியாகத் திகழ்ந்தார். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அவர் என்றும் உறுதியுடன் செயலாற்றினார். அவரது மறைவு செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்தத் துயரமான நேரத்தில், எனது ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி".

(Release ID: 2294264)

***

VJ/PD/SE/SH


(रिलीज़ आईडी: 2294451) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam