புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
பிரிக்ஸ் நாடுகளின் தேசிய புள்ளியியல் தலைவர்கள் கூட்டம் : லக்னோவில் தொடங்கியது
प्रविष्टि तिथि:
03 AUG 2026 6:36PM by PIB Chennai
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய புள்ளியியல் அலுவலக தலைவர்களின் இருநாள் மாநாடு, இந்தியாவின் தலைமையில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று (03.08.2026) தொடங்கியது. இதில் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் என 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இம்மாநாடு "மாற்றத்தின் இயக்குவிசையாகத் தரமான புள்ளியியல்" என்ற முதன்மைப் பொருண்மையின் கீழ் நடைபெறுகிறது. நிகழ்வில் உரையாற்றிய மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க், டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பைப் பயன்படுத்துதல், புள்ளியியல் அமைப்புகளை நவீனப்படுத்துதல் மற்றும் தரவுத் தனியுரிமையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் இந்தியா, பிரேசில், ரஷியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ‘பிரிக்ஸ் கூட்டுப் புள்ளியியல் வெளியீடு 2026’ அறிக்கையை வெளியிட்டனர்.
மேலும், டிஜிட்டல் முறையில் தரவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, புள்ளியியல் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது மற்றும் அரசு நிர்வாகத் தரவுகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவது குறித்துத் தொழில்நுட்ப அமர்வுகளில் பல்வேறு நாடுகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டன. சான்றுகள் சார்ந்த துல்லியமான கொள்கை முடிவுகளை எடுக்க இக்கூட்டு முயற்சி பெரிதும் உதவும் எனப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293963®=3&lang=1
***
TV/VK/SE
(रिलीज़ आईडी: 2294120)
आगंतुक पटल : 8