பாதுகாப்பு அமைச்சகம்
கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
03 AUG 2026 6:17PM by PIB Chennai
முப்படைகளின் ‘எதிர்காலப் போர்முறைப் பயிற்சி’ குறித்த பயிற்சிக் கருத்தரங்கம் புதுதில்லி மானெக்ஷா மையத்தில் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்வில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜாசுப்பிரமணி சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், மாறிவரும் போர்முறைகளின் தன்மைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். எதிர்காலப் பாதுகாப்பு சவால்களை முன்னதாகவே கணித்து, அனைத்துத் தளங்களிலும் திறம்படச் செயல்படும் ஆற்றலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவு , சைபர் திறன்கள், தானியங்கி அமைப்புகள், விண்வெளித் தொழில்நுட்பங்கள் மற்றும் தரவு அடிப்படையிலான முடிவுகள் எதிர்காலப் போர்களைத் தீர்மானிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படைகள், தொழில்துறை, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர் தலைமையகத்தால் நடத்தப்படும் இந்த 4 வாரகாலப் பயிற்சியில், முப்படை அதிகாரிகளுடன் அரசு மற்றும் தொழில்துறைப் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றுப் போர்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293950®=3&lang=1
***
TV/VK/SE
(रिलीज़ आईडी: 2294119)
आगंतुक पटल : 5