தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வுகால திட்டத்தில் 54 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு : மத்திய அமைச்சர் தகவல்

प्रविष्टि तिथि: 03 AUG 2026 5:33PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சார்பில், முறைசாராத் துறைத் தொழிலாளர்களுக்கு வயதான காலத்தில் பொருளாதாரப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் பிரதமரின் தொழிலாளர் கவுரவ நிதி திட்டம் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இது ஒரு விருப்பத்தின் அடிப்படையிலான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட, மாத வருமானம் ரூ.15,000 அல்லது அதற்கு குறைவாக உள்ள முறைசாராத் தொழிலாளர்கள் இதில் சேரத் தகுதியானவர்கள்.

இத்திட்டத்தின் கீழ் சேரும் பயனாளிகளுக்கு 60 வயது நிறைவடைந்த பிறகு மாதந்தோறும் ரூ.3,000 உறுதிளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும். சேரும் வயதைப் பொறுத்துத் தொழிலாளர்கள் மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்த வேண்டும். தொழிலாளர் செலுத்தும் தொகைக்கு இணையான 50 சதவீத பங்களிப்புத் தொகையை மத்திய அரசே செலுத்துகிறது.

இத்திட்டத்தில் இதுவரை 54 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். இதில் பெண்களின் பங்களிப்பு 53.1சதவீதமாக உள்ளது. அரசு தரப்பில் இதுவரை ரூ.2,011.01 கோடி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. சேரும் பயனாளிகளுக்கு 2039 பிப்ரவரி முதல் ஓய்வூதிய விநியோகம் தொடங்கவுள்ளது.

 

பொது சேவை மையங்கள் www.maandhan.in இணையதளம் மற்றும் இ-ஷ்ரம் தள ஒருங்கிணைப்பு மூலம் இத்திட்டத்திற்கான பதிவுகள் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றன. இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293891&reg=3&lang=1                   

***

TV/VK/SE


(रिलीज़ आईडी: 2294113) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी