வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
சீர்மிகு நகரங்கள் இயக்கத்தின் அளவிடக்கூடிய விளைவுகளின் மதிப்பீடுகள்
प्रविष्टि तिथि:
03 AUG 2026 6:03PM by PIB Chennai
செப்டம்பர் 2025-ல் வெளியிடப்பட்ட ‘மத்திய நிதியுதவித் திட்டங்களின் மதிப்பீடு – நகர்ப்புற மாற்றம் மற்றும் திறன் மேம்பாடு’ என்ற தனது அறிக்கையில், சீர்மிகு நகரங்கள் இயக்கத் திட்டம், தேசிய நகர்ப்புற முன்னுரிமைகள் மற்றும் குடிமக்களின் தேவைகளுடன் வலுவான இணக்கத்தைக் கொண்டிருப்பதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் பல நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதாகவும் நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்த இயக்கம் 8,063 திட்டங்களில் 93 சதவீதத்தை நிறைவு செய்திருப்பதுடன், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை 100 சதவீதம் நிறைவு செய்துள்ளது. இதன் விளைவாக, நகர்ப்புறங்களில் வசிக்கும் சூழல், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலை ஆகியவற்றில் அளவிடக்கூடிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த தகவல்களின்படி, 31.03.2026 நிலவரப்படி , சீர்மிகு நகரங்கள் இயக்கத்தின் கீழ், மொத்தம் ரூ. 1,64,811 கோடி மதிப்பிலான 8,064 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ரூ. 1,56,257 கோடி மதிப்பிலான 7,790 திட்டங்கள் (மொத்தத் திட்டங்களில் 97%) நிறைவு செய்யப்பட்டுள்ளன.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு டோகன் சாஹு இன்று மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293938®=3&lang=1
***
TV/BR/SE
(रिलीज़ आईडी: 2294112)
आगंतुक पटल : 3