தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இ-ஷ்ரம் இணையதளத்தில் இதுவரை 31.82 கோடிக்கும் அதிகமான முறைசாரா தொழிலாளர்கள் பதிவு : மத்திய அமைச்சர் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 03 AUG 2026 5:32PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில், முறைசாரா தொழிலாளர்களுக்காக இ-ஷ்ரம்  இணையதளம் 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று தொடங்கப்பட்டது. இத்தளம் கிக் தொழிலாளர்கள், தளம் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்படப் பலதரப்பட்ட தொழிலாளர்களுக்குச் சுயமாகச் சான்றளிக்கும் அடிப்படையில் 'உலகளாவிய கணக்கு எண்' (UAN) வழங்குகிறது. இதுவரை 31.82 கோடிக்கும் அதிகமான முறைசாராத் தொழிலாளர்கள் இதில் வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளனர்.

2024-ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று 'ஒரே தீர்வுத் தளம்' என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டம், வீட்டுவசதி திட்டம் , ஸ்வநிதி திட்டம் மற்றும் மகப்பேறு நலத் திட்டம் உட்பட 15 மத்திய அரசு நலத்திட்டங்கள் இ-ஷ்ரம் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மேலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேசிய தொழில் சேவை, திறன்  இந்தியா திட்டம்   மற்றும் ஓய்வூதியத் திட்டங்களுடனும் இது இணைக்கப்பட்டுள்ளது. போலிப் பதிவுகளைத் தவிர்க்க ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி முறை பின்பற்றப்பட்டு, முதன்மைத் தரவுகள் நேரடியாகப் பெறப்பட்டு துல்லியம் உறுதி செய்யப்படுகிறது.

 

இணையதளம், உமாங்  செயலி, பொது சேவை மையங்கள் மற்றும் மாநில சேவை மையங்கள் மூலமாகத் தொழிலாளர்கள் எளிதாகப் பதிவு செய்யலாம். இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293889&reg=3&lang=1             

***

TV/VK/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2294086) வருகையாளர் எண்ணிக்கை : 43
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी