திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
நாட்டின் இளைஞர்களைத் தொழில்துறைக்குத் தேவையானத் திறன்களுடன் தயார்படுத்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது
प्रविष्टि तिथि:
03 AUG 2026 4:08PM by PIB Chennai
மத்திய அரசின் திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள அனைத்துச் சமூக மக்களுக்கும் திறன் பயிற்சி, மறு திறன் பயிற்சி, மேம்பட்ட திறன் பயிற்சி ஆகியவற்றை அளிக்கிறது. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், தேசிய தொழில்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம், கைவினைஞர் பயிற்சித் திட்டம் போன்றத் திட்டங்கள் மூலம் திறன் மேம்பாட்டு மையங்கள் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. நாட்டின் இளைஞர்களை தொழில்துறைக்குத் தேவையான திறன்களுடன் எதிர்காலத்திற்கு தயார்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கிராமப்புற, பழங்குடியின மற்றும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் பயிற்சிக்கான விரிவுபடுத்த அரசு தீவிரமாக செயல்படுகிறது. இதையடுத்து கூடுதல் பயிற்சி உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், போதிய சேவைகள் சென்றடையாத பகுதிகளில் பயிற்சியை விரிவுபடுத்துதல், மாநில திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் திறன் மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்துதலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தகவலை மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு இணை அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293793®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2294029)
आगंतुक पटल : 7