நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் இணையவழி செயல்பாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்தி, நிதி மோசடிகளைத் தடுப்பதற்கான

प्रविष्टि तिथि: 03 AUG 2026 4:25PM by PIB Chennai

'ஜன் தன் தர்ஷக்' எனப்படும் மக்களுக்கான பணப் பரிவர்த்தனைகளுக்கான வழிகாட்டி செயலியில், வங்கிகள் பதிவேற்றம் செய்துள்ள தரவுகளின்படி, கிராமப்புற பகுதிகளில், 99.92% கிராமங்கள் (மொத்தமுள்ள 6,01,328 கிராமங்களில் 6,00,868 கிராமங்கள்) தற்போது 5 கி.மீ சுற்றளவிற்குள் ஏதேனும் ஒரு வங்கிச் சேவையை (வங்கி கிளை / வணிகத் தொடர்பாளர் / இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி) பெறும் வசதியைப் பெற்றுள்ளன. இதன் மூலம் நாடு முழுமையான வங்கிச் சேவை வசதிகளுக்கான உச்சவரம்பை எட்டியுள்ளது.

17.07.2026 அன்றைய நிலவரப்படி, 1.81 லட்சத்திற்கும் அதிகமான வங்கி கிளைகள், 17.36 லட்சம் வணிகத் தொடர்பாளர்கள், 1.65 லட்சம் இந்திய அஞ்சலக பரிவத்தனை மையங்கள் கொண்ட வலுவான உள்கட்டமைப்பு வசதி, இத்தகைய வங்கிச் சேவைகளின்   விரிவாக்கப் பணிகளுக்கு உறுதுணையாக துணையாக உள்ளது.

கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகளில் வங்கிச் சேவைகளை எளிதில் பெறும் வகையில், நாட்டின் மக்கள் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் 5 கி.மீ சுற்றளவுக்குள் ஒரு வங்கிச் சேவை மையத்தை (வங்கி கிளை / வணிகத் தொடர்பாளர் / இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி) அமைப்பதே மத்திய அரசின் நோக்கமாகும்.

இவ்வாறு அமைக்கப்படும் கிளைகளில் 25% வங்கிச் சேவை இல்லாத கிராமப்புற பகுதிகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், வர்த்தக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், பேமெண்ட்ஸ் வங்கிகள், உள்ளூர் பகுதி வங்கிகள்,  பிராந்திய கிராமப்புற வங்கிகள் ஆகியவை இந்தியாவின் எந்தப் பகுதியிலும் முன் அனுமதியின்றி வங்கி கிளைகளைத் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் இணையவழிப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், அவை சார்ந்த நிதி மோசடிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதில், இணையம், மொபைல் செயலியில் நிதிசார்  அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, ரிசர்வ் வங்கி பிப்ரவரி 2021-ல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் குறித்த முதன்மை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இணையம், மொபைல் வங்கிச் சேவை, பற்று / கடன் அட்டை மூலம் பணம் செலுத்துதல் போன்ற பல்வேறு பணப் பரிவர்த்தனை வழிகளுக்கு, வங்கிகள் ஒரு பொதுவான குறைந்தபட்சப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுத் தரத்தைச் செயல்படுத்த வேண்டும் என இந்த வழிகாட்டுதல்கள் கட்டாயப்படுத்துகின்றன.

மக்களவையில் இன்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293812&reg=3&lang=1    

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2294006) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada