பிரதமர் அலுவலகம்
கர்நாடக மாநிலம் மைசூருவில் சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்
प्रविष्टि तिथि:
01 AUG 2026 8:35PM by PIB Chennai
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையம் - விவேக ஸ்மரகாவை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். அங்கு கூடியிருந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அந்நகரின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரிக்குத் தனது வணக்கத்தைத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார்.
தங்கள் சொந்த லட்சியங்களை விட நாட்டிற்கும் விளிம்புநிலை மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையிலான ஒரு புதிய தலைமுறை இளைஞர்களை உருவாக்கும் சவாலை கலாச்சார மையத்திற்குப் பிரதமர் விடுத்தார். "பாரத அன்னைக்குச் சேவையாற்றுவதையும் ஏழைகளின் துயரங்களைப் போக்குவதையுமே தங்கள் வாழ்வின் முழுமையான குறிக்கோளாகக் கொண்ட இளைஞர்களை நாம் இங்கே உருவாக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.
இளம் தலைமுறையினரால் மட்டுமே முன்னெடுக்கப்பட்ட வியக்கத்தக்க தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாதனைகளை விவரித்த பிரதமர், நாடு, உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாகவும், மூன்றாவது பெரிய புத்தொழில் நிறுவன சூழலியலைக் கொண்ட நாடாகவும், இரண்டாவது பெரிய செல்பேசி உற்பத்தித் திறன் கொண்ட நாடாகவும் திகழ்வதற்கு இளைஞர்களே காரணம் என்று குறிப்பிட்டார். "இன்று நமது இளைஞர்களின் அபாரத் திறமையால் மட்டுமே, செயற்கை நுண்ணறிவு, டீப்டெக் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் இந்தியா புதிய பொற்கால அத்தியாயங்களை எழுதி வருகிறது," என்று திரு மோடி கூறினார்.
விண்வெளித் துறையில் சமீபத்தில் எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைக் குறிப்பிட்ட பிரதமர், தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை, நாட்டின் டிஜிட்டல் மற்றும் உற்பத்தித் துறைப் புரட்சிகளை முன்னெடுத்துச் செல்லும் தடையற்ற வேகத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகக் கொண்டாடினார். " தற்சார்பு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி செய்தல் போன்ற எந்தவொரு முன்முயற்சியாக இருந்தாலும், அதன் முழுமையான வெற்றிக்குக் காரணமான உந்துசக்தி இந்தியாவின் இளைஞர்களின் வலிமை மட்டுமே," என்று திரு மோடி குறிப்பிட்டார்.
கல்வி கட்டமைப்பை முழுமையாக நவீனமயமாக்குவது குறித்து விவரித்த பிரதமர், 21-ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப கல்விசார் கட்டமைப்புகளைத் தீவிரமாக மாற்றியமைக்கும் தேசியக் கல்விக் கொள்கையைப் பாராட்டினார். "ஒருபுறம் நாங்கள் உள்கட்டமைப்பை பெருமளவில் நவீனமயமாக்கி வருகிறோம்; அதேவேளையில், நவீனத் தேவைகளுக்கு ஏற்ப ஒட்டுமொத்தக் கல்வி முறையையும் வடிவமைத்து வருகிறோம்," என்று திரு மோடி குறிப்பிட்டார்.
உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல் என்ற கருத்தாக்கத்தை முன்னிறுத்தி, பரிசுகளை வாங்கும் போது உள்ளூர் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உள்நாட்டு கைவினைஞர்களுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் குடிமக்களைக் கேட்டுக்கொண்டார். "இந்தியர்களின் உழைப்பால் உருவான பொருட்களைப் பரிசுகளாக அளிப்பது நமது கலாச்சாரத்தை அழகாகப் பிரதிபலிப்பதுடன், உள்ளூர் குடும்பங்களுக்குத் தேவையான முக்கிய நிதி உதவியையும் வழங்கும்," என்று திரு மோடி வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293106®=3&lang=1
***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2293521)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam