பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் ஆடவர் 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற அங்குஷ் பங்கலுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
02 AUG 2026 11:58AM by PIB Chennai
கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அங்குஷ் பங்கலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போட்டி முழுவதும் அங்குஷ் பங்கல் வெளிப்படுத்திய வலிமையையும் திறமையையும் பிரதமர் பாராட்டியுள்ளார்.
அவரது எதிர்கால முயற்சிகளுக்குத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு, அவரது இந்தச் சாதனை, மேலும் பல இளம் குத்துச்சண்டை வீரர்களைச் சிறந்து விளங்கத் தூண்டும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அங்குஷ் பங்கலை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். போட்டிகளின் போது அவரது வலிமையும் திறமையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கவையாக இருந்தன. அவரது வரவிருக்கும் முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள். அவரது இந்தச் சாதனை, இன்னும் பல இளம் குத்துச்சண்டை வீரர்களைச் சிறந்து விளங்கத் தூண்டட்டும்."
***
(Release ID: 2293255)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2293409)
आगंतुक पटल : 7