சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இந்தியாவின் தொழில்நுட்பத் தற்சார்பிற்கு ஆற்றல் அளித்தல்
प्रविष्टि तिथि:
01 AUG 2026 5:43PM by PIB Chennai
உறுதிப்பாடு, தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் சரியான நேரத்தில் வழங்கப்படும் நிறுவன ஆதரவு ஆகியவை பல தொழில்முனைவோர் உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த நிறுவனங்களை நிறுவ உதவியுள்ளன. அத்தகைய ஒரு எழுச்சியூட்டும் உதாரணம், பட்டியலின தொழில்முனைவோரான திரு மல்லிகார்ஜுன ராவ் யெலிசேலாவால் நிறுவப்பட்ட, ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மின்னணு உற்பத்தி நிறுவனமான ஸ்மார்ட்-வேவ்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள பட்டியலின மக்களுக்கான துணிகர மூலதன நிதியத்தின் மாற்றியமைக்கும் தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்த நிறுவனம், பாதுகாப்பு, விண்வெளி, தொழில்துறைப் பொருட்கள், வாகனங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் ஆகியவற்றுக்கான மின்னணு சுற்றுப் பலகைகளின் வடிவமைப்பு, மேம்பாடு, சோதனை, ஒருங்கிணைப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் ஈடுபடும் ஒரு மேம்பட்ட மின்னணு உற்பத்தி சேவைகள் (EMS) பிரிவை நிறுவியுள்ளது. அதன் பணியாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். நிறுவனத்தின் வளர்ச்சி ஆற்றலை அங்கீகரித்து, துணிகர மூலதன உதவியின் மூலம் ரூ. 4.98 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293020®=3&lang=1
***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2293384)
आगंतुक पटल : 4