ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குரூப் 'ஏ' பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகளின் முன்கூட்டிய ஓய்வுக்கு ரயில்வே பரிந்துரை

प्रविष्टि तिथि: 01 AUG 2026 3:11PM by PIB Chennai

அரசு விதிகளுக்கு உட்பட்டு பொது நலன் கருதி 5 'ஏ' பிரிவு அதிகாரிகளுக்கு முன்கூட்டிய ஓய்வு அளிக்க ரயில்வே அமைச்சகத்தின் ரயில்வே வாரியத்தின் ஆய்வுக் குழுக்கள் பரிந்துரைத்துள்ளன.

மறுஆய்வுக் குழுக்கள், ஐஆர்ஹெச்எஸ்-ஐச் சேர்ந்த இரண்டு எஸ்ஏஜி அதிகாரிகள், வடக்கு ரயில்வேயின் ஐஆர்எஸ்இ-ஐச் சேர்ந்த ஒரு ஜேஏஜி அதிகாரி, வடக்கு ரயில்வேயின் ஐஆர்எஸ்இஇ-ஐச் சேர்ந்த ஒரு அதிகாரி, மேற்கு ரயில்வேயின் ஐஆர்டிஎஸ்-ஐச் சேர்ந்த ஒரு ஜேஏஜி அதிகாரி ஆகியோரின் முன்கூட்டிய ஓய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மறுஆய்வுக் குழுக்கள், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின்படி அதிகாரிகளின் பணிக்காலப் பதிவுகளை விரிவாக மதிப்பீடு செய்தன. தங்கள் பரிந்துரைகளை வழங்குவதற்கு முன்னர், இந்த ஆய்வில் ஆண்டு செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கைகள், நேர்மைப் பதிவுகள், கண்காணிப்புத் தகவல்கள், ஒழுங்கு நடவடிக்கை வரலாறு, பிற தொடர்புடைய பணிக்காலப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதனையடுத்து, பொது நலன் கருதி அதிகாரிகளை முன்கூட்டியே ஓய்வு பெறச் செய்யுமாறு குழுக்கள் ஒருமனதாகப் பரிந்துரைத்தன.

  ஊழல், நேர்மையின்மை, திறமையின்மை ஆகியவற்றின் மீது ரயில்வே சமரசமற்ற கொள்கையைப் பின்பற்றுகிறது. பொதுச் சேவையில் நேர்மை, ஒழுக்கம் ஆகியவை சமரசம் செய்ய முடியாதவை. ரயில்வே நெறிமுறையின் தொடர்புடைய விதிகளின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள், இந்த முக்கிய விழுமியங்களை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292964&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2293044) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam