ரெயில்வே அமைச்சகம்
தானாபூர் - ஃபதுஹா இடையே ரூ.976 கோடி மதிப்பிலான பன்னோக்கு வழித்தடத் திட்டத்திற்கு ரயில்வே ஒப்புதல்
प्रविष्टि तिथि:
01 AUG 2026 12:10PM by PIB Chennai
பீகாரில் ரயில் போக்குவரத்துத் திறனை கணிசமாக அதிகரிக்கும் வகையில், கிழக்கு மத்திய ரயில் பாதையின் 29 கிலோ மீட்டர் நீளமுள்ள தானாபூர் முதல் ஃபதுஹா வரையிலான பகுதியை ரூ.976 கோடி செலவில் பன்னோக்கு வழித்தடங்களாக மாற்றுவதற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம், பாட்னா ரயில் வழித்தடத்தின் மிகவும் பரபரப்பான பகுதிகளில் ஒன்றில் உள்ள நெரிசலைக் குறைத்து, பயணிகள், சரக்கு சேவைகள் இரண்டையும் பெருமளவில் அதிகரிக்க வழிவகுக்கும்.
அனுமதிக்கப்பட்ட இந்தப் பணி மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. 1. தானாபூர் - பாட்னா இடையே மூன்றாவது, நான்காவது வழித்தடங்கள். 2. ராஜேந்திர நகர் - பாட்னா சாஹேப் இடையே மூன்றாவது வழித்தடம் அமைக்கப்படும். 3. பாட்னா சாஹேப் - ஃபதுஹா இடையே மூன்றாவது, நான்காவது வழித்தடங்கள் அமைக்கப்படும். இந்தக் கூடுதல் வழித்தடங்கள், பாட்னா பிராந்தியம் முழுவதும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, நேரந்தவறாமையை மேம்படுத்தும்.
இந்தத் திட்டம் தினமும் கூடுதலாக 22 பயணிகள் ரயில்களையும் 18 சரக்கு ரயில்களையும் இயக்க அனுமதிக்கும். மேலும், இது ஆண்டுக்குக் கூடுதலாக 5.2 மில்லியன் டன் சரக்குப் போக்குவரத்தைக் கையாளவும் வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292881®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2292989)
आगंतुक पटल : 10