பாதுகாப்பு அமைச்சகம்
வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத், கடற்படைத் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்பு
प्रविष्टि तिथि:
01 AUG 2026 11:47AM by PIB Chennai
வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் இன்று (01 ஆகஸ்ட் 2026) கடற்படைத் துணைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
கோவாவில் உள்ள கடற்படை அகாடமியின் 38-வது ஒருங்கிணைந்த கேடட் படிப்பின் முன்னாள் மாணவரான வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத், 01 ஜூலை 1990 அன்று இந்திய கடற்படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர், தகவல் தொடர்பு, மின்னணு போர் நிபுணர் ஆவார். வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி, கோவாவில் உள்ள கடற்படைப் போர்க் கல்லூரி ஆகியவற்றின் கடற்படை உயர் கமாண்டிங் படிப்பு முன்னாள் மாணவர் ஆவார்.
36 ஆண்டுகளுக்கும் மேலான தனது சிறப்பான பணிக்காலத்தில், அவர் கடலிலும் தரையிலும் பலதரப்பட்ட கட்டளை, செயல்பாட்டு, பயிற்சி பதவிகளை வகித்துள்ளார். அவரது முக்கிய கடற்படைப் பதவிகளில் , ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐஎன்எஸ் ராஜ்புத்தின் நிர்வாக அதிகாரிப் பதவியும், நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் அபய், பெரிய தரையிறங்கும் பீரங்கிக் கப்பலான ஐஎன்எஸ் ஷர்துல், ஏவுகணைப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சத்புரா ஆகியவற்றின் கட்டளைப் பதவிகளும் அடங்கும். கல்வான் சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்குக் கடற்படையின் கடற்படை செயல்பாட்டு அதிகாரியாகவும் அவர் பணியாற்றினார். இவர் 1999-ல் ஆபரேஷன் விஜய் நடவடிக்கையிலும், 2001-ல் ஆபரேஷன் பராக்கிரம நடவடிக்கையிலும் பங்கேற்றுள்ளார்.
வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் படைப் பணியாளர் கல்லூரியில் இயக்குதல் பணியாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். கடற்படைத் தலைமையகத்தில், கடற்படை விமானப் பணியாளர்களின் இணை இயக்குநர், விமானக் கொள்முதல் இயக்குநர், முதன்மை இயக்குநர் ஆகியவை இவரது முக்கியப் பதவிகளாகும். இவர் 2006 முதல் 2009 வரை உத்திசார் தணிக்கைக் குழுவிலும், 2016 முதல் 2019 வரை இந்தியக் கடற்படை உத்திசார் செயல்பாட்டுக் குழுவிலும் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
ரியர் அட்மிரலாகப் பதவி உயர்வு பெற்றதும், அவர் இந்திய கடற்படை அகாடமியின் துணைத் தளபதி, கடற்படைத் தலைமைத் தளபதியின் (வான்வழி) உதவி அதிகாரி, மகாராஷ்டிர கடற்படைப் பகுதியின் கொடி அதிகாரி ஆகிய பதவிகளை வகித்தார்.
வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட பிறகு, அவர் 13 டிசம்பர் 2023 முதல் 31 ஜூலை 2026 வரை கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார். கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநராக, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது இந்தியக் கடற்படையின் திட்டமிடல், ஆயத்தநிலை, செயல்பாட்டுத் தயார்நிலை ஆகியவற்றிலும், தற்போதைய மேற்கு ஆசிய நெருக்கடியின் போது கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் அவர் ஈடுபட்டிருந்தார் .
அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி 2024-ம் ஆண்டில் அதி விசிஷ்ட சேவா பதக்கமும், 2025-ம் ஆண்டில் யுத் சேவா பதக்கமும் அவருக்கு வழங்கப்பட்டன.
38 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பான சேவைக்குப் பிறகு, நேற்று (31 ஜூலை 2026) பணியிலிருந்து ஓய்வு பெற்ற வைஸ் அட்மிரல் தருண் சோப்திக்குப் பதிலாக வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் பொறுப்பேற்றுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292876®=3&lang=1
***
(Release ID: 2292876)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2292980)
आगंतुक पटल : 7