தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கரின் காங்கர் மாவட்டத்தில் 13 நாட்களில் மலேரியாவால் 5 பேர் உயிரிழந்ததாக வெளியான செய்தி: தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

प्रविष्टि तिथि: 31 JUL 2026 7:46PM by PIB Chennai

சத்தீஸ்கரின் கங்கர் மாவட்டத்தில், 2026 ஜூலை 28, அன்று 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததையடுத்து, 13 நாட்களுக்குள் மலேரியா காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான ஊடகச் செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தாமாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அந்தச் சிறுவனுக்குத் தனியார் ஆய்வகம் ஒன்றில் முதலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மலேரியா தொற்று இல்லை என்று முடிவு வந்திருந்தது. எனினும், அவனது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவன் அவசரமாக அல்பெலபாராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். இருப்பினும், அவனுக்கு மலேரியா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தும் இரத்தப் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள்ளாகவே அவன் உயிரிழந்துவிட்டான்.

ஊடகச்செய்தியில் உள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவை மனித உரிமை மீறல் தொடர்பான  சிக்கல்களை எழுப்புவதாக ஆணையம் கருதுகிறது. எனவே, இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சத்தீஸ்கர் மாநிலத் தலைமைச் செயலாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இன்று வெளியான ஊடகச் செய்தியின்படி, இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில சுகாதாரத் துறை வீடு வீடாகச் சென்று மலேரியா பரிசோதனை மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292699&reg=3&lang=1     

---

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2292814) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी