கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
முக்கியத் துறைமுகங்களில் நிலமெடுப்பு பணிகளுக்கான திருத்தப்பட்ட கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
31 JUL 2026 7:38PM by PIB Chennai
துறைமுகத்தைச் சார்ந்த தொழில்களுக்கு நீர் நிலையோரப் பகுதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலங்களை ஒதுக்குவதற்கான திருத்தப்பட்ட கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கை, பொது-தனியார் கூட்டுமுயற்சியில், தனியார் முதலீட்டை விரைவுபடுத்துதல், செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துகிறது.
திருத்தப்பட்ட இந்தக் கொள்கை, தற்போதுள்ள பயனர்கள் புதிய கப்பல் நிறுத்துமிடங்கள், படகுத்துறைகள், முனையங்கள் மற்றும் ஒற்றை மிதவை நங்கூரமிடும் இடங்கள் மூலம் தங்கள் திறனை விரிவுபடுத்த வழிவகை செய்வதன் மூலம், 2016-ம் ஆண்டின் தற்போதைய பயன்பாட்டுக் கொள்கையைப் புதுப்பிக்கிறது. அதேவேளையில், சலுகை ஒப்பந்தங்களை நீட்டிப்பதற்கும், தகுதியான அரசு நிறுவனங்களுக்கு நீர் நிலைப் பகுதியை வழங்குவதற்கும், மாறிவரும் வணிக மற்றும் ஒழுங்குமுறைச் சூழல்களால் ஏற்படும் மாற்றங்களைக் கையாள்வதற்கும் ஒரு கட்டமைப்பையும் இது வழங்குகிறது.
அமைச்சரவை ஒப்புதல் குறித்து கருத்து தெரிவித்த மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், "திருத்தப்பட்ட கொள்கை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பொது நலனையும் சமநிலைப்படுத்தும் ஒரு முக்கிய சீர்திருத்தமாகும். தற்போதுள்ள நிறுவனங்களுக்கு நீண்டகால உறுதியை வழங்குவதன் மூலமும், திறன் விரிவாக்கத்திற்கு வழிவகுப்பதன் மூலமும், எதிர்கால முதலீடுகளுக்கு ஒரு வெளிப்படையான கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியா ஒரு உலகளாவிய வர்த்தக மற்றும் சரக்குப் போக்குவரத்து மையமாக உருவெடுப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பை நாங்கள் வலுப்படுத்துகிறோம்," என்று கூறினார்.
இந்தக் கொள்கை, அனைத்து முக்கியத் துறைமுகங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், இது மத்திய அரசு, எந்திவித நிதிச் சுமையுமின்றி, சரக்குகளைக் கையாள்வதை மேம்படுத்தவும், துறைமுகக் கரையோரச் சொத்துக்களின் பயன்பாட்டை உகந்ததாக்கவும், துறைமுகங்களுக்கு நிலையான வருவாயை ஈட்டவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292692®=3&lang=1
---
TV/BR/SE
(रिलीज़ आईडी: 2292801)
आगंतुक पटल : 10