பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சக்ஷம் அங்கன்வாடி, போஷன் 2.0 திட்டத்தின் கீழ் அனைத்துப் பயனாளிகளுக்கும் துணை ஊட்டச்சத்து வழங்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 31 JUL 2026 2:09PM by PIB Chennai

பரிந்துரைக்கப்பட்ட உணவு அளவுக்கும்சராசரி தினசரி உட்கொள்ளலுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் பொருட்டுமிஷன் சக்ஷம் அங்கன்வாடி எனப்படும் திறன் அங்கன்வாடி இயக்கம், 2-ம் கட்ட ஊட்டசத்து திட்டத்தின் மூலம் வயது வரையிலான குழந்தைகள்கர்ப்பிணிப் பெண்கள்பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் (14-18 வயது) உள்ளிட்ட அனைத்துப் பயனாளிகளுக்கும் துணை ஊட்டச்சத்து வழங்கப்பட்டுள்ளது.

இது வீட்டிற்கு எடுத்துச் செல்லும் உணவுப் பொருள்காலை சிற்றுண்டி, சூடாக சமைத்த உணவுகள் ஆகிய வடிவங்களில் வழங்கப்படுகிறது. 6 முதல் 23 மாதங்கள் வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காகஅங்கன்வாடி மையங்களில் முக அங்கீகார அமைப்பைப் பயன்படுத்திகுழந்தைகளின் தாய்மார்களுக்கு உணவுப் பொருள் விநியோகிக்கப்படுகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் திருத்தப்பட்ட அட்டவணை-II-ல் உள்ள ஊட்டச்சத்து விதிமுறைகளின்படிபயனாளிகளுக்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லும் உணவு வழங்கப்படுகிறது. கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள  குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது. பழைய விதிமுறைகள் பெரும்பாலும் கலோரியை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தனதிருத்தப்பட்ட விதிமுறைகள்தரமான புரதம்ஆரோக்கியமான கொழுப்புகள், நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகியவற்றை வழங்கும் உணவுப் பன்முகத்தன்மை கொள்கைகளின் அடிப்படையில் விரிவானதாகவும் சமச்சீரானதாகவும் உள்ளன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பெண்கள்குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292323&reg=3&lang=1

***

SS/PLM/RJ/SE


(रिलीज़ आईडी: 2292742) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी