பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் பாலின விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
31 JUL 2026 2:08PM by PIB Chennai
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டமானது, பாலின விகிதத்தை அதிகரித்தல், பெண்கள், சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல் ஆகிய அம்சங்களுக்கு உதவுகிறது. இத்திட்டம், பல்வேறு தரப்பினருக்கு தகவல் அளித்தல், அவர்களை ஊக்குவித்தல், ஈடுபடுத்துதல், அதிகாரமளித்தல் ஆகியவற்றின் மூலம் பெண் குழந்தைகள் குறித்த மனப்பான்மையை மாற்றி, நல்ல மாற்றங்களை உருவாக்க முயற்சிக்கிறது. 15-வது நிதிக் குழுவின் காலத்தில், பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் கொள்கை முயற்சியிலிருந்து ஒரு தேசிய இயக்கமாக மாறியுள்ளது.
சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் சமீபத்திய தகவலின்படி, தேசிய அளவில் பாலின விகிதம் 2014-15-ல் 918 ஆக இருந்தது. இது 2025-26-ல் 929 ஆக அதிகரித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292322®=3&lang=1
***
SS/PLM/RJ/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2292740)
வருகையாளர் எண்ணிக்கை : 36