பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
சக்ஷம் அங்கன்வாடி இயக்கம், போஷன் 2.0 ஆகிய திட்டப் பயனாளிகளுக்கு 6 சேவைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது
प्रविष्टि तिथि:
31 JUL 2026 2:07PM by PIB Chennai
மிஷன் சக்ஷம் அங்கன்வாடி எனப்படும் திறன் அங்கன்வாடி இயக்கம், போஷன் 2.0 எனப்படும் 2-ம் கட்ட ஊட்டச்சத்து திட்டம் ஆகியவை மத்திய அரசால் நிதியுதவி செய்யப்படும் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், துணை ஊட்டச்சத்து, பள்ளி செல்வதற்கு முந்தைய முறைசாராக் கல்வி, ஊட்டச்சத்து, சுகாதாரக் கல்வி, நோய்த்தடுப்பு, சுகாதாரப் பரிசோதனை, பரிந்துரை சேவைகள் ஆகிய 6 சேவைகள் அடங்கிய தொகுப்பு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
இந்த ஆறு சேவைகளில், நோய்த்தடுப்பு, சுகாதாரப் பரிசோதனை, பரிந்துரை சேவைகள் ஆகிய 3 சேவைகள் சுகாதாரம் தொடர்பானவை. இவை, தேசிய சுகாதார இயக்கம் மூலம் வழங்கப்படுகின்றன. இந்தச் சேவைகள், தகுதியுள்ள பதிவுசெய்யப்பட்ட பயனாளிகளான, நாடு முழுவதும் உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வடகிழக்குப் பிராந்தியத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 14 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் ஆகியோருக்கு அங்கன்வாடி மையத்தின் மூலம் வழங்கப்படுகின்றன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292321®=3&lang=1
***
SS/PLM/RJ/SE
(रिलीज़ आईडी: 2292735)
आगंतुक पटल : 8