அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பொது மின்சார வாகன சார்ஜிங் தொழில்நுட்பத்தை வணிகமயமாக்க மத்திய அரசு நிதி உதவி
प्रविष्टि तिथि:
31 JUL 2026 12:58PM by PIB Chennai
இந்தியாவில் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் பயன்படும் வகையில் பொது மின்சார வாகனங்களுக்கான சார்ஜர்களை உற்பத்தி செய்யும் ஆலை அமைப்பதற்காக, இந்தூரைச் சேர்ந்த ரோட்கிரிட் இந்தியா தனியார் நிறுவனத்தின் திட்டத்திற்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் நிதி உதவி வழங்கியுள்ளது.
இது தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் பதக், நம்பகமான, ஒருங்கிணைந்த சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது நாட்டில் மின்சார வாகனப் போக்குவரத்தை அதிகரிக்க அவசியம் என்றார். மேம்படுத்தப்பட்ட சார்ஜிங் தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயெ உற்பத்தி செய்வது, இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதுடன் பசுமைப் போக்குவரத்துக்கான கட்டமைப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
ரோட்கிரிட் நிறுவனத்தின் நிர்வாகிகள் பேசுகையில், இந்த நிதி உதவி காப்புரிமை பெற்ற பொது சார்ஜர்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், நாடு முழுவதும் எளிதில் அணுகக்கூடிய சார்ஜிங் கட்டமைப்புகளை விரிவுபடுத்தவும் உதவும் எனத் தெரிவித்தனர். இத்திட்டம் இருசக்கர, மூன்று சக்கர, வணிக வாகனங்கள் அனைத்திற்கும் பயன்படும் சார்ஜர்களை உள்நாட்டிலேயே தயாரித்து தற்சார்பு இந்தியா இலக்கிற்கு வலுசேர்க்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292264®=3&lang=1
***
SS/PD/SE
(रिलीज़ आईडी: 2292664)
आगंतुक पटल : 7