சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவுச் சங்கங்களின் வைப்புத் தொகையாளர்கள்/உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, பல மாநில கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டம் & விதிகள், 2023-ன் மூலம் நடவடிக்கை

प्रविष्टि तिथि: 31 JUL 2026 1:28PM by PIB Chennai

பல மாநில கூட்டுறவுச் சங்கங்களின் (எம்எஸ்சிஎஸ்) சட்டம், 2002-ன் விதிகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள்தன்னாட்சி அமைப்புகளாக இயங்குவதுடன்தங்களது உறுப்பினர்களுக்குப் பொறுப்புடைமை உடையவையாகவும் திகழ்கின்றன.

சங்கங்களின் விசாரணைஆய்வுகள்கலைப்பு நடவடிக்கை கலைப்பாளர்  நியமனம்குற்றங்கள்தண்டனைகள் மற்றும் குற்றங்களைக் கவனத்தில் கொள்ளுதல் தொடர்பான விதிகளை இந்தச் சட்டம் வழங்குகிறது. மோசடிஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை துரோகம் போன்ற அறிந்துகொள்ளத்தக்கக் குற்றங்கள்  நடந்துள்ளதாகப் புகாரில் தெரியவரும்போதெல்லாம்அந்த விவகாரம் சட்டம் மற்றும் நடைமுறைகளின்படி விசாரணை மற்றும் வழக்குத் தொடரலுக்காகசம்பந்தப்பட்ட மாநில காவல்துறைபொருளாதாரக் குற்றப்பிரிவுமத்திய புலனாய்வு அமைப்பு  அல்லது பிற தகுதியான புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரைக்கு அனுப்பப்படுகிறது.

கலைக்கப்படும் நிலையிலுள்ள சங்கங்களின் சொத்துக்களை மீட்டெடுப்பது மற்றும் நிலுவைத் தொகைகளை வசூலிப்பது ஆகிய பணிகள்எம்எஸ்சிஎஸ் சட்டம், 2002 மற்றும் அதற்கான விதிகளின்படி நியமிக்கப்பட்ட கலைப்பாளரால் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில்சட்டம் மற்றும் நீதித்துறை  (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர்  திரு அர்ஜுன் ராம் மேக்வால் இந்த தகவலை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292281&reg=3&lang=1

***

SS/PKV/SE


(रिलीज़ आईडी: 2292651) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी