மருந்துகள் துறை
அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு
प्रविष्टि तिथि:
31 JUL 2026 2:27PM by PIB Chennai
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்த தகவலின்படி, அரசு சுகாதார மையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், அவர்களின் கையிலிருந்து செய்யும் மருத்துவச் செலவுகளைக் குறைப்பதற்கும், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் "இலவச மருந்து சேவை முன்னெடுப்பை" அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் கீழ், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்களின் திட்ட அமலாக்கத் திட்டங்களில் தெரிவித்துள்ள தேவைகளின் அடிப்படையில், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வளங்களுக்குள் அரசு சுகாதார மையங்களில் இலவசமாக அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கான நிதி உதவி வழங்கப்படுகிறது.
அரசு சுகாதார மையங்களில் கிடைக்கப்பெற வேண்டிய மருத்துவமனை வாரியான அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது:
இத்தகவலை ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுபிரியா பட்டேல் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292334®=3&lang=1
***
TV/PKV/SE
(रिलीज़ आईडी: 2292633)
आगंतुक पटल : 11