பிரதமர் அலுவலகம்
ஒரு மக்கள் பிரதிநிதியின் உண்மையான உறுதியை எடுத்துக்காட்டும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
29 APR 2026 8:41AM by PIB Chennai
ஒரு மக்கள் பிரதிநிதியின் உண்மையான உறுதியை எடுத்துக்காட்டும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த சாதனை அளவிலான வாக்குப்பதிவை உறுதி செய்வது, நாட்டின் விழிப்புள்ள குடிமக்களாகிய நமது கடமை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களைத் தொடர்ந்து மேம்படுத்துவது, கடமைகளைப் புனிதமான பொறுப்பாகக் கருதி உண்மையுடன் நிறைவேற்றுவது, நியாயமான தீர்ப்பை உறுதி செய்வது, தாராளமாக வழங்குவது, அனைவரையும் சமத்துவத்துடன் நடத்துவது, மேலும் தன்னை ஒரு புனிதமான மனப்பான்மையுடன் தூய்மையாகவும், ஒழுக்கமாகவும், அர்ப்பணிப்புடனும் வைத்துக்கொள்வது ஆகியவையே ஒரு மக்கள் பிரதிநிதியின் உண்மையான உறுதிப்பாடாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2256435®=3&lang=1
-----
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2292293)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam