எரிசக்தி அமைச்சகம்
தேசிய மின் தொகுப்பு குறித்த மதிப்பீடு
प्रविष्टि तिथि:
30 JUL 2026 2:53PM by PIB Chennai
அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை ஈடுசெய்யும் வகையில் மின் பகிர்மான உள்கட்டமைப்பை வலுப்படுத்த, மத்திய அரசு 2024-ல் 'தேசிய மின்சாரத் திட்டத்தை' வெளியிட்டது. நாட்டின் பல்வேறு வளர்ந்து வரும் மற்றும் பாரம்பரியப் பொருளாதாரத் துறைகளில் (மின்சார வாகனப் போக்குவரத்து, தரவு மையங்கள் மற்றும் தொழில் விரிவாக்கம் உட்பட) எதிர்பார்க்கப்படும் மின்சாரத் தேவை மற்றும் மின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப, 2023-2032 காலகட்டத்திற்கான மின் பகிர்மாண அமைப்புத் தேவைகளை இத்திட்டம் கோடிட்டுக் காட்டுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நம்பகமான முறையில் ஒருங்கிணைப்பதை உறுதி செய்வதோடு, மாறிவரும் மின் நுகர்வு மையங்கள் மற்றும் புதிய வகையிலான மின்சாரத் தேவைகளையும் இந்தத் திட்டமிடல் கணக்கில் கொள்கிறது.
2032-ம் ஆண்டிற்குள் கணிக்கப்பட்டுள்ள 388 ஜிகாவாட் உச்சபட்ச மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மத்திய மற்றும் மாநில மின் விநியோக அமைப்புகளை விரிவுபடுத்துவது இத்திட்டத்தில் அடங்கும். இத்திட்டத்தின்படி, 2026 ஜூன் நிலவரப்படி இருந்த 5.09 லட்சம் கம்பி வட கிலோமீட்டரிலிருந்து 2032-க்குள் 6.48 லட்சம் கம்பி வட கி.மீ. ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், பிராந்தியங்களுக்கு இடையிலான மின் விநியோகத் திறன் 2026 ஜூன் நிலவரப்படி இருந்த 120 ஜிகாவாட்டிலிருந்து 2032-க்குள் 168 ஜிகாவாட் -ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய மின்சாரத் துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபத் நாயக் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291650®=3&lang=1
*
TV/PKV/SE
(रिलीज़ आईडी: 2292107)
आगंतुक पटल : 7