கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொது நூலகங்களுக்கான நிதி ஒதுக்கீடு

प्रविष्टि तिथि: 30 JUL 2026 3:43PM by PIB Chennai

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில், தேசிய நூலக இயக்கத்தின் கீழ், மாதிரி நூலகங்களை அமைக்கும் திட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசங்களில் உள்ள ஒரு மாநில மைய நூலகம், ஒரு மாவட்ட நூலகம் மற்றும் அமைச்சகத்தால் அடையாளம் காணப்படும் 6 நூலகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 2016-17-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரை பட்ஜெட்டில் ரூ.22,620 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் ரூ. 15,945 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. பொது நூலகங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் ரூ.10,492 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையின்படி, நூலகம் என்பது மாநில பட்டியலின் வரம்பிற்குள் வருவதால் பொது நூலகங்கள் அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன.

மாநிலங்களவையில் இன்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291710&reg=3&lang=1  

***

TV/SV/RJ/SE


(रिलीज़ आईडी: 2292067) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी