கலாசாரத்துறை அமைச்சகம்
நீருக்கடியில் கலாச்சார பாரம்பரியம்
प्रविष्टि तिथि:
30 JUL 2026 3:44PM by PIB Chennai
இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் சார்பில் நீருக்கடியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளும் பிரிவால், துவாரகா, பேட் துவாரகா (குஜராத்), மகாபலிபுரம் (தமிழ்நாடு), காரைக்கால் (புதுச்சேரி) ஆகிய இடங்களில் தற்போது ஆராய்ச்சியும் ஆய்வுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும், மத்திய அரசு, தமிழ்நாட்டின் பூம்புகாரில், தமிழ்நாடு மாநில தொல்லியல் துறைக்கும், குஜராத்தின் பெட் துவாரகா, சாரி, கங்காட்டா பெட் ஆகிய இடங்களில், தேசிய கடலியல் நிறுவனத்தின் கடல்சார் தொல்லியல் மையத்திற்கும் நீருக்கடியில் அகழ்வாராய்ச்சி/ஆய்வு செய்வதற்கான உரிமத்தை வழங்கியுள்ளது.
இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் நீருக்கடியில் தொல்லியல் ஆய்வுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்
2026-27 - ₹66,50,000/-
மேலும், தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை, நிலத்திலும் நீரிலும் மேற்கொள்ளப்படும் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளுக்காக ₹7 கோடியை ஒதுக்கியுள்ளது.
இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் நீருக்கடியில் தொல்லியல் பிரிவு, தொல்பொருள் ஆய்வாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் நீரில் மூழ்கிய தளங்களை ஆய்வு செய்வதற்கும் ஒரு பிரத்யேகத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
2030 ஆம் ஆண்டு வரை நீருக்கடியில் ஆய்வு/அகழ்வாராய்ச்சி செய்வதற்காக மகாபலிபுரம் உள்பட பல்வேறு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று (30.07.2026) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291714®=3&lang=1
***
TV/PLM/SE
(रिलीज़ आईडी: 2292051)
आगंतुक पटल : 6