புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெருங்கடல் கண்காணிப்பு, வலையமைப்பு மற்றும் முன்னறிவிப்பு நடைமுறைகளை வலுப்படுத்துதல்

प्रविष्टि तिथि: 30 JUL 2026 2:20PM by PIB Chennai

பெருங்கடல் பகுதிகளில் வசிக்கும் நீர்வாழ் உயிரினங்களின் செயல்பாடுகள், ஆழ்கடல் பகுதிகளில் நிலவும் சூழல் உள்ளிட்ட பெருங்கடல் சார்ந்த கண்காணிப்புகளை வலுப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எண்முறை சார்ந்த வானிலை முன்னறிவிப்புகள், கடல்சார் முன்னறிவிப்புகள் போன்றவற்றிற்கு தேவையான அமைப்புகளுக்கு உயர் தரத்திலான வசதிகளை உருவாக்குவதன் மூலம் நிகழ்நேர கண்காணிப்புகளை துல்லியமாக வழங்குவதற்கு உதவுவதுடன் பருவமழை, புயல், கடல்சார்ந்த முன்னறிவிப்புகளை மேம்படுத்த  உதவிடும்.

இத்தகைய செயல்திறன்மிக்க நவீன தொழில்நுட்பம் அடிப்படையிலான கட்டமைப்புகள், கடல் சீற்றம், பருவமழையின் தாக்கம், புயல், சூறாவளி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பேரிடர் அபாயங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு பெரிதும் உறுதுணையாக அமைகிறது.

மாநிலங்களவையில் மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291634&reg=3&lang=1  

***

TV/SV/RJ/SE


(रिलीज़ आईडी: 2292028) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी