பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
டிஏஜேஜியுஏ திட்டத்தின் செயலாக்கம்
प्रविष्टि तिथि:
30 JUL 2026 1:44PM by PIB Chennai
மக்களவையில் இன்று (30.07.2026) கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பழங்குடியினர் விவகாரங்கள் துறை மத்திய இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கி, பல்வேறு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 'தர்த்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியான்' (டிஏஜேஜியுஏ - DAJGUA) எனப்படும் கார்த்தி ஆபா பழங்குடியினர் கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் செயலாக்கம் குறித்துத் தெரிவித்தார்.
தார்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான் திட்டத்தின் திறன் வாய்ந்த செயலாக்கத்தை உறுதி செய்வதற்காக, தொடர்புடைய அமைச்சகங்களுடன் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்துகிறது. மேலும், அந்தந்த மாநிலங்கள்/மாவட்ட அதிகார அமைப்புகளுடன் வழக்கமான ஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் கண்காணிப்பு, செயலாக்கத்திற்காக, திட்ட கண்காணிப்புக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதி கர்மயோகி அபியான் என்ற முன்முயற்சி மூலம், அமைச்சகம் சமூக ஈடுபாட்டையும் பங்களிப்பையும் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.
தார்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில், 36 வட்டங்களில் 248 கிராமங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கிராமங்களில் மொத்தம் 74079 பழங்குடியின சமூகத்தினரின் வீடுகள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291616®=3&lang=1
***
TV/PLM/SE
(रिलीज़ आईडी: 2291972)
आगंतुक पटल : 9