பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்குவங்கத்தில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUL 2026 1:35PM by PIB Chennai

மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் பண்ட்வான் தொகுதியில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளை அமைப்பதற்கான நிலம் மாநில அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மேற்குவங்க மாநில அரசு அளித்துள்ள தகவலின் அடிப்படையில், கலிம்போங்கில் உள்ள இந்த ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்தப் பள்ளிக்கான நிரந்தர கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கென ரூ.20.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு அதில் ரூ. 9.96 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக திரு துர்காதாஸ் உய்கே தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291606&reg=3&lang=1   

***

TV/SV/RJ/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2291855) வருகையாளர் எண்ணிக்கை : 31
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali