பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
வன உரிமைகள் சட்டத்தின் கீழ் பழங்குடியினரின் உரிமைகள்
प्रविष्टि तिथि:
30 JUL 2026 1:38PM by PIB Chennai
மக்களவையில் இன்று (30.07.2026) ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே, பழங்குடியினர், பிற பாரம்பரிய வனவாசிகளின் வன உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டத்தின் கீழ் உள்ள உரிமைகள் குறித்து விளக்கினார். இதில் உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வன் குஜ்ஜார் சமூகத்தினரிடமிருந்து அமைச்சகத்திற்கு பெறப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களிடம் இருப்பதால், இந்தக் கோரிக்கைகள் அந்தந்த மாநில அரசுகளுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கும் பரிசீலனைக்காகவும், சட்ட விதிகளுக்கு இணங்க தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பப்பட்டன.
பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், வன உரிமைச் சட்டத்தில் உள்ள விதிகளைக் கடைப்பிடிக்குமாறு அனைத்து மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களையும் வலியுறுத்தி வருகிறது. வன உரிமைச் சட்டத்தின் முன்னேற்றம் போன்றவற்றை மதிப்பிடுவதற்காக, மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களுடன் வழக்கமான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், வன உரிமைச் சட்டத்தின் விதிகள் மீறப்படுவது தொடர்பாக அமைச்சகத்திற்கு வரும் குறைகள்/முறையீடுகள், வன உரிமைகள் மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறும், வன உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சித் தொகுதிகள்/ சிற்றேடுகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் தவறாமல் பகிரப்படுகின்றன. திறன் மேம்பாடு, பயிற்சி நடவடிக்கைகள் போன்றவை மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291608®=3&lang=1
(Release ID : 2291608)
***
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2291815)
आगंतुक पटल : 7