எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயில் நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக நடப்பாண்டின் முதல் காலாண்டு லாபம் அதிகரிப்பு

प्रविष्टि तिथि: 30 JUL 2026 1:42PM by PIB Chennai

திறமையான நிதிசார் செயல்பாடுகள், திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் செயில் நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் அசோக்குமார் பாண்டா, இது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த உத்திசார் வலிமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று கூறினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல், உலகளவிலான பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், நிதிசார்ந்த விவேகமான முடிவுகள் முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட உத்திசார் செயல்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் உறுதியான நிலைத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோன்று, பணப்புழக்க மேலாண்மை கடுமையான நிதிக்கட்டுப்பாடுகள், மேம்பட்ட செயல்பாட்டு மூலதன நடைமுறைகள் போன்ற அம்சங்களும், நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக அவர் கூறினார்.

இந்நிறுவனத்தின் மொத்த எஃகு உற்பத்தி நடப்பாண்டில் 89 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் மூலதனச் செலவு ரூ.2,575 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291614&reg=3&lang=1

***

TV/SV/RJ/SH


(रिलीज़ आईडी: 2291806) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Bengali , Bengali-TR