திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திறன் பயிற்சி முடிவுகள், வேலைவாய்ப்பு உருவாக்கம்

प्रविष्टि तिथि: 29 JUL 2026 4:21PM by PIB Chennai

மத்திய அரசின் திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்  பல்வேறு திட்டங்களின் கீழ் திறன் மேம்பாட்டு மையங்கள் மூலம் திறன் பயிற்சியை வழங்குகிறது. பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டம், கைவினைஞர் பயிற்சி திட்டம் ஆகியவை தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ஐ. டி. ஐ) மூலம் நாடு முழுவதும் உள்ள சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும். இந்திய இளைஞர்கள் எதிர்காலத்திற்குத் தயாராவதற்கும், தொழில்துறைக்கு பொருத்தமான திறன்களைக் கொண்டிருப்பதற்கும் உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொன்றிலும், மாநில வாரியாக, எம். எஸ். டி. இ. யின் திட்டங்களின் கீழ் பல்வேறு தொழில்களில் திறன் பயிற்சி அளிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை இணைப்பில் உள்ளது.

 

2025-26‌ ஆம் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில்  10,786 திறன் பழகுநர் பயிற்சி பெற்றுள்ளனர்.

ஜேஎஸ்எஸ் திட்டத்தின் கீழ், 15818  பேர் திறன் பயிற்சி பெற்றுள்ளனர்.

தேசிய பழகுநர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1,01, 788 பேர் பயனடைந்துள்ளனர்.

 

இந்தத் தகவலை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291107&reg=3&lang=1

 

***

TV/PKV/SH


(रिलीज़ आईडी: 2291600) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी