கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் சாதனைகள்

प्रविष्टि तिथि: 29 JUL 2026 4:53PM by PIB Chennai

கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்திற்கு 31.05.2023 அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம், வேளாண் உள்கட்டமைப்பு நிதி, வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்புத் திட்டம், வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டம் மற்றும் பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை முறைப்படுத்தும்  திட்டம்  ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் அளவில் கிடங்குகள், இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் மையங்கள், பதப்படுத்தும் நிலையங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகள் போன்ற பல்வேறு வேளாண் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதை உள்ளடக்கியுள்ளது.

 

இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 1,015  திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 313 கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதுடன், 203 திட்டங்கள் கட்டுமான நிலையில் உள்ளன. தமிழகத்தில் 13 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 5 கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதுடன், 8 திட்டங்கள் உருவாக்கப்பட்டு  வருகின்றன.

 

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291152&reg=3&lang=1

***

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2291583) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी