விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

யுவிகா எனப்படும் இளம் விஞ்ஞானி திட்டம்

प्रविष्टि तिथि: 29 JUL 2026 4:06PM by PIB Chennai

யுவிகா 2026 ( இளம் விஞ்ஞானி) திட்டம் 2026 மே 11முதல் 22  வரை விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் , சதீஷ் தவான் விண்வெளி மையம்  தேசிய தொலைநிலை உணர்திறன் மையம் , யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம்  விண்வெளி பயன்பாட்டு மையம் , இந்திய தொலைநிலை உணர்திறன் நிறுவனம் , வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் , இஸ்ரோ உந்துவிசை வளாகம், பிராந்திய தொலைநிலை உணர்திறன் மையம்  மேற்கு ஆகிய ஒன்பது இஸ்ரோ மையங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 456 திறமையான மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

யுவிகா 2026 திட்டத்தின் போது, மூத்த விஞ்ஞானிகள் மற்றும் ககன்யாத்ரிகளுடன் கலந்துரையாடல், விண்வெளி அறிவியல் மற்றும் இஸ்ரோ சாதனைகள் குறித்த சொற்பொழிவுகள்ராக்கெட் ஏவுதலின் நேரடி காட்சி, அண்டார்டிகாவில் இந்தியாவின் பாரதி ஸ்டேஷன் குழுவுடன் நேரடி கலந்துரையாடல், சந்திரயான்-3 ரோபாட்டிக்ஸ் குறித்த செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளை அனுபவபூர்வமான கற்றல் மூலம் வெளிப்படுத்தினர்.

 

முந்தைய பதிப்பில் 7 இஸ்ரோ மையங்களில் 350 மாணவர்களுடன் ஒப்பிடும்போது, யுவிகாவின் 2026 பதிப்பில் 9 இஸ்ரோ மையங்களில் 456 மாணவர்கள் பங்கேற்றனர். தற்போது, திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நிறுவன கூட்டாண்மைக்கான திட்டங்கள் எதுவும் இல்லை.

 

யுவிகா திட்டத்தில் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது. இருப்பினும், கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 15% சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

 

இந்தத் தகவலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291081&reg=3&lang=1

 

***

TV/PKV/SH

 


(रिलीज़ आईडी: 2291571) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali