விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

நேவிக் செயற்கைக்கோள் கூட்டமைப்பின் தற்போதைய செயல்பாட்டு நிலவரம்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்

प्रविष्टि तिथि: 29 JUL 2026 4:06PM by PIB Chennai

இந்தியாவின் நேவிக் செயற்கைக்கோள் கூட்டமைப்பில் தற்போது மூன்று செயற்கைக்கோள்கள் பிஎன்டி (இருப்பிடம், வழிகாட்டுதல், நேரம்) சேவை வழங்கி வருவதாக விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், ஐஆர்என்எஸ்எஸ்-1எஃப் செயற்கைக்கோளின் 10 ஆண்டுகள் ஆயுட்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது ஐஆர்என்எஸ்எஸ்-1பி, ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ, என்விஎஸ்-01 ஆகிய மூன்று செயற்கைக்கோள்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாகக் கூறினார்.

இருப்பிடச் சேவையை வழங்குவதற்கு சுற்றுப்பாதையில் குறைந்தபட்சம் நான்கு செயற்கைக்கோள்கள் இயங்க வேண்டும் என்பதால், நேவிக் அமைப்பால் தற்போது தனித்த நிலையில் தொடர்ந்து சேவை வழங்க முடியாது எனும் போதிலும், நேரச் சேவை தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்புப் படையினர் தங்களது செயல்பாடுகளுக்கு நேவிக் உட்படப் பலதரப்பட்ட செயற்கைக்கோள் வழிகாட்டு அமைப்புகளைப் பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலான பயன்பாடுகளுக்கு நேவிக் அமைப்பு பிற செயற்கைக்கோள் அமைப்புகளுடன் இணைந்த சூழலில் பயன்படுத்தப்படுவதால் பயனர்களுக்குப் பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் இல்லை என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார். நேவிக் அமைப்பின் அடுத்த செயற்கைக்கோளான என்விஎஸ்-03 விண்ணில் ஏவத் தயாராக உள்ளதாகவும், என்விஎஸ்-04, என்விஎஸ்-05 ஆகிய இரு செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291079&reg=3&lang=1

****

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2291471) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी