உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள வீர்ர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம்

प्रविष्टि तिथि: 29 JUL 2026 3:43PM by PIB Chennai

நாட்டில் உள்ள சுதந்திரப் போராட்ட வீர்ர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஓய்வூதியம் வழங்கும் வகையில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான நிதியுதவித் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதி, ஆவண சான்றுகளை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலம் விண்ணப்பிக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், தற்போது 12,898 பயனாளிகள் உள்ளனர். இதில் 1,553 சுதந்திரப் போராட்ட வீரர்களும், 11,345 குடும்பத்தினரும் அடங்குவர்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை துணைவர் அல்லது வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் தொடர்பான விரிவான விவரங்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்கு இடையே நிதிக் குழுவின் பரிந்துரையின் பெயரில் இத்திட்டம் குறித்து மதிப்பீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கொள்கை வழிகாட்டுதல்கள், அகவிலைப்படி நிவாரணம், ஆண்டுக்கு இருமுறை திருத்தியமைப்பதற்கும் அடிப்படை ஓய்வூதியத்தை அவ்வப்போது திருத்தியமைப்பதற்கும் நிதிக்குழுவின் பரிந்துரைகள் வகை செய்கிறது. இதன்படி, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், அடிப்படை ஓய்வூதியம் இறுதியாக கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி திருத்தியமைக்கப்பட்டது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291044&reg=3&lang=1

****

TV/SV/RJ/SH

 


(रिलीज़ आईडी: 2291452) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English