உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கங்கைப் படுகையில் ஒருங்கிணைந்த வெள்ள எச்சரிக்கை மேலாண்மை

இடுகை இடப்பட்ட நாள்: 29 JUL 2026 3:40PM by PIB Chennai

பீகார் உள்ளிட்ட வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடிய மாநிலங்களில் பேரிடர் தடுப்புத் தயார்நிலை மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகளின் செயல்திறனை மத்திய அரசு வழக்கமாக ஆய்வு செய்து வருகிறது.  இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் வழங்குகிறது.

வெள்ளம் மற்றும் நதி மேலாண்மை தொடர்பான விவகாரங்கள் இந்தியா – நேபாளம் இடையே அமைக்கப்பட்ட இருதரப்பு வழிமுறைகள் மூலம் விவாதிக்கப்படுகின்றன.

அதன்படி, இந்தியா, நேபாள நாடுகளுக்கு பொதுவாக உள்ள ஆறுகளில், வெள்ள முன்னறிவிப்புக்கான கூட்டுக்குழு, கோசி மற்றும் கண்டக் திட்டங்களுக்கான கூட்டுக் குழு வெள்ளம் மற்றும் நீர்த்தேக்கம் வேளாண்மைக்கான கூட்டுக் குழு, நீர் வளங்களுக்கான கூட்டுக் குழு ஆகிய வழிமுறைகள் மூலம் விவாதிக்கப்படுகிறது.

இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291040&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2291451) வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी