உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் தடுப்புக்காகத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

प्रविष्टि तिथि: 29 JUL 2026 3:39PM by PIB Chennai

போதைப்பொருள் தடுப்புச் சட்ட அமலாக்க முகமைகள், 1985-ம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், போதைப் பொருள் பறிமுதல், வழக்குப்பதிவு, கைது நடவடிக்கைகள், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை அகற்றுதல், சட்டவிரோத பயிரி விளைவித்தலை அழித்தல், நிதிசார் விசாரணைகள், 1988-ம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனநலப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களில் சட்டவிரோதக் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகள் நடைபெற்றுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நாடு முழுவதும் போதைப் பொருள் தடுப்புப் பணிக்குழுவின் கட்டமைப்பை அரசு பெருமளவு வலுப்படுத்தியுள்ளது. அனைத்து 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் போதைப் பொருள் தடுப்புப் பணிக்குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், அவற்றின் செயல்பாடு, கட்டமைப்பு, வளங்கள் ஆகியவை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இடையே வேறுபடுகின்றன.  இப்பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில்  மாநில அளவிலான போதைப் பொருள் தடுப்பு பணிக் குழுவுக்கான மாதிரி வடிவம் தயாரிக்கப்பட்டு 2026  ஜூன் மாதத்தில் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பால் பகிரப்பட்டது.

இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291039&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2291443) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English