சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
29 JUL 2026 12:38PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைகள் நாட்டின் போக்குவரத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்பாகத் திகழ்கிறது. அன்றாடம் லட்சக்கணக்கான பயணிகளையும், சரக்குகளையும் மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வதற்கு உதவிகரமாக உள்ளன.
சாலையோரங்களில் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகள், சாலைப் பாதுகாப்பு, நெடுஞ்சாலைகளில் சீரான போக்குவரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சட்டவிரோத கட்டுமானங்கள், வர்த்தக நிறுவனங்கள், தற்காலிக கட்டடங்கள் போன்ற ஆக்கிரமிப்புகள், வாகனப் போக்குவரத்திற்கான பாதைகளை வெகுவாக குறைக்கின்றன. அத்துடன், வாகன ஓட்டிகளுக்கு இத்தகைய ஆக்கிரமிப்புகள் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், வடிகால் அமைப்புகளுக்கும் சேதங்களை ஏற்படுத்துவதாக உள்ளன. இதுபோன்ற தடைகள் காரணமாக வாகனங்கள் போக்குவரத்துக்கான பாதையை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
மேலும் வாகன ஓட்டுநரின் கவனத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதன் மூலம் சாலை விபத்துகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கணிசமான அளவில் அதிகரிக்கின்றன. மேலும் இத்தகைய ஆக்கிரமிப்புகள் எதிர்கால உள்கட்டமைப்பு வசதிகளுக்கான விரிவாக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு, சாலைகளைப் பாதுகாப்பானதாகவும், எளிதாக பயன்படுத்தக் கூடியதாகவும், பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி பெறாத ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290941®=3&lang=1
***
TV/SV/RJ/KR
(रिलीज़ आईडी: 2291133)
आगंतुक पटल : 16