புவி அறிவியல் அமைச்சகம்
பருவமழை, வானிலை நிகழ்வுகள் குறித்த நீண்டகால முன்னறிவிப்புக்கான கணிப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகைள்
இடுகை இடப்பட்ட நாள்:
29 JUL 2026 11:49AM by PIB Chennai
நாட்டில் பருவமழை, வானிலை நிகழ்வுகள் குறித்த நீண்டகால முன்னறிவிப்புகள் தொடர்பான கணிப்புகளை மேம்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கைகைளை மேற்கொண்டு வருகிறது.
பருவநிலை மாதிரிகளைக் கொண்ட தரவுகள், இடம் சார்ந்த தெளிவு திறன், மேம்பட்ட தரவு ஒருங்கிணைப்பிற்கான தொழில்நுட்பங்கள் போன்றவை மூலம் வானிலை முன்னறிவிப்பு தொடர்பான தரவுகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், வானிலை ரேடார் அமைப்புகள், தானியங்கி வானிலை நிலையங்கள், தானியங்கி மழைமானிகள், வளிமண்டல மேலடுக்கு கண்காணிப்பு அமைப்புகள், காற்று தொடர்பான விவரக் குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு கண்காணிப்புத் தளங்கள் மூலம் நாடு தழுவிய கண்காணிப்பு கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உள்நாட்டு வானிலை செயற்கைக்கோள் மூலம் அதுசார்ந்த கண்காணிப்பு அமைப்புகளை விரிவுபடுத்துவதற்கும் வானிலை தொடர்பான முன்னறிவிப்பை துல்லியமாக வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இணையதளங்கள், மொபைல் செயலிகள், குறுஞ்செய்திகள், தொலைக்காட்சி வானொலி, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு தளங்கள் மூலம் வானிலை சார்ந்த முன்னறிவிப்புகளை வெளியிடுவதற்கும் இது உதவிடும்.
மக்களவையில் மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290919®=3&lang=1
***
TV/SV/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2291049)
வருகையாளர் எண்ணிக்கை : 37