புவி அறிவியல் அமைச்சகம்
பெருங்கடல் கண்காணிப்பிற்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
29 JUL 2026 11:47AM by PIB Chennai
தேசிய கடல்சார் கண்காணிப்பு கட்டமைப்புக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு வலுப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெருங்கடல் பகுதியில் ஏற்படும் நீரோட்டங்கள் மிதக்கும் உயிரினங்களின் உயிரிப் பொருட்களை கண்காணித்தல், கடல் கண்காணிப்பு மிதவை அமைப்புகள் போன்றவை குறித்த கடல்சார் தரவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
கடற்பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மண்டலம், இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக மிதவை அமைப்புகள் நீருக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கடலில் சுனாமி போன்ற ஆழிப் பேரலைகள் ஏற்படுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள், அகண்ட அலைவரிசையுடன் கூடிய நில அதிர்வு நிலையங்கள், ஆழ்கடல் சுனாமி மிதவைகள், கடலோர அலைமானிகள், செயற்கைக்கோள் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நவீன கண்காணிப்பு அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன.
அறிவியல் ரீதியான நவீன தொழில்நுட்பம் மூலம் நிகழ்நேர கண்காணிப்பு தரவுகளை வழங்குவதற்கும் பருவமழை, சூறாவளி, கடல்சார் சூழல் குறித்த முன்னறிவிப்புகளை துல்லியமாக வழங்குவதற்கும் இவை உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய நவீன அமைப்புகள் மூலம் பெறப்படும் தகவல்கள் உலகளவிலான தொலைத்தொடர்பு அமைப்புகள் மூலம் இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்திற்கு அனுப்பப்பட்டு, அவை தரக்கட்டுப்பாடு செய்யப்பட்டு துல்லியமான தகவல்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதன் மூலம் பருவமழை, சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர்கள் குறித்த தகவல்களில் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
மக்களவையில் மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290918®=3&lang=1
***
TV/SV/RJ/KR
(रिलीज़ आईडी: 2291041)
आगंतुक पटल : 11