சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் பற்றிய தகவல்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
28 JUL 2026 6:14PM by PIB Chennai
தரமான, மலிவு விலையில் மற்றும் இலவச மருத்துவச் சேவைகளை உறுதி செய்வதன் மூலம், ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பை நோக்கிய இந்தியாவின் பயணத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. தற்போது இந்தத் திட்டம் அனைத்து 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இது நாடு முழுவதும் சுகாதாரச் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதிலும், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மருத்துவச் சேவைகளை வழங்குவதை வலுப்படுத்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
30 ஜூன் 2026 நிலவரப்படி, நாடு முழுவதும் இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு இடையிலான மருத்துவமனைச் சேவைப் பரிமாற்ற வசதியைப் பயன்படுத்தி மொத்தம் 29.05 லட்சம் மருத்துவமனைச் சேர்க்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 8,383.97 கோடியாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள சுகாதார களப் பணியாளர்கள் (பிரதமரின் ஆரோக்கிய நண்பர்கள்), பயனாளிகளை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை எளிதாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி பிரதாப்ராவ் ஜாதவ், இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290627®=3&lang=1
***
TV/BR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2291017)
வருகையாளர் எண்ணிக்கை : 29