உரங்கள் துறை
azadi ka amrit mahotsav

முன்கூட்டிய திட்டமிடல், நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் உரிய நேர இறக்குமதி மூலம் போதுமான உர இருப்பை அரசு உறுதி செய்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 28 JUL 2026 5:44PM by PIB Chennai

ஒவ்வொரு பயிர் சாகுபடி பருவத்திலும் நாடு முழுவதும் உரங்கள் சரியான நேரத்திலும், போதுமான அளவிலும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, வலுவான திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் விநியோக நடைமுறை செயல்பாட்டில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு பயிர் சாகுபடி பருவமும் தொடங்குவதற்கு முன்னதாக, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, அனைத்து மாநில அரசுகளுடனும் கலந்தாலோசித்து, மாநில வாரியாகவும் மாத வாரியாகவும் தேவைப்படும் உரங்களின் அளவை மதிப்பிடுகிறது. இதன் அடிப்படையில், (DoF) மாதாந்திர விநியோகத் திட்டத்தை வெளியிடும் உரத்துறை, மாநிலங்களுக்குப் போதுமான அளவு உரங்களை ஒதுக்குவதுடன், அவற்றின் இருப்பையும் தொடர்ந்து கண்காணிக்கிறது.

அரசு மானியம் பெறும் அனைத்து முக்கிய உரங்களின் இயக்கமும், நாடு முழுவதும் ஒருங்கிணைந்த உர மேலாண்மை அமைப்பு என்ற இணையவழி கண்காணிப்பு அமைப்புமுறையின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. யூரியா மற்றும் பிற உரங்களுக்கான தேவைக்கும் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி, இறக்குமதி மூலம் ஈடுசெய்யப்படுகிறது. உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதிசெய்ய, அந்தப் பருவத்திற்கான இறக்குமதித் தேவையும் முன்கூட்டியே இறுதி செய்யப்படுகிறது.

மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290590&reg=3&lang=1

 

***

TV/BR/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2291012) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी