புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் மதிப்பீட்டின் படி, தூத்துக்குடி கடற்கரை மிதமான தூய்மைப் பகுதி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 29 JUL 2026 11:45AM by PIB Chennai

மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தேசிய கடலோர ஆய்வு மையம் மூலம், தூத்துக்குடி, மன்னார் வளைகுடா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நுண்ணிய நெகிழிப் பொருட்கள், கடல் குப்பைகள் அதிகரித்து வருவது குறித்த கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. இந்த மையம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் செற்கை இழைகள், நுண்ணிய நெகிழிப் பொருட்களின் பிரதான கழிவாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

ஆறுகளின் முகத் துவாரங்களில் அதாவது, நதி நீர் கடலோடு கலக்கும் இடங்கள், பராமரிப்பின்றி இருக்கும் கடற்கரைப் பகுதிகள், பயன்பாடற்ற மீன்பிடி வலைகளை கடலில் வீசுவது போன்ற பல்வேறு காரணிகள், கடலோரப் பகுதிகள் மாசடைவதற்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.

கடற்கரைப் பகுதிகளில் உள்ள நுண் நெகிழிப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த தரவுகளின் அடிப்படையில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் தூய்மை குறித்த குறியீடுகளை உருவாக்கியுள்ளது. இதன் அடிப்படையில் தூத்துக்குடி, மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதிகள், மிதமான தூய்மைப் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நெகிழிப் பொருட்களின் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பதற்காக பல்வேறு கொள்கைகளை வகுத்து, மாசுவின் அளவைக் குறைப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களவையில் மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290916&reg=3&lang=1

***

TV/SV/RJ/KR


(रिलीज़ आईडी: 2291003) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali