வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ஏற்றுமதி 863.1 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவிலான சாதனை படைத்துள்ளது

प्रविष्टि तिथि: 28 JUL 2026 4:13PM by PIB Chennai

கடந்த நிதியாண்டில், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதில் சரக்கு ஏற்றுமதி 441.8 பில்லியன் அமெரிக்க டாலராகவும், சேவை ஏற்றுமதி 421.3 பில்லியன் அமெரிக்க டாலராகவும் பதிவாகியுள்ளது. இது ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான அரசின் நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவின் சரக்கு, சேவைத் துறைகளின் ஒருங்கிணைந்த வலிமையை வெளிப்படுத்துகிறது.

சரக்கு ஏற்றுமதிக்கான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2025-26-ம் நிதியாண்டில், பிற நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி மதிப்பு குறித்த விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக ஒப்பந்தம், 29 டிசம்பர் 2022 அன்று அமலுக்கு வந்துள்ளதன் மூலம் கடந்த நிதியாண்டில் 7284.17 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான சரக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.

இந்தியா-பூட்டான் வர்த்தகம், போக்குவரத்துக்கான ஒப்பந்தம் 29 ஜூலை 2017 அன்று புதுப்பிக்கப்பட்ட  நிலையில் 1252.86 அமெரிக்க டாலர் அளவில் சரக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.

 

இந்தியா-ஜப்பான் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் 1 ஆகஸ்ட் 2011 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில். 6039.5 அமெரிக்க டாலர் மதிப்பிலான சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியா-கொரியா குடியரசுடன் செய்துகொள்ளப்பட்ட விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் 1 ஜனவரி 2010 அன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதனையடுத்து, 6012.06 அமெரிக்க டாலர் மதொப்பிலான ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.

இதேபோன்று, மலேஷியா, மொரிஷியஸ், நேபாளம், நியூசிலாந்து, ஓமன், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து ஆகிய நாடுகளுடனான  வர்த்தக ஒப்பந்தம் மூலம், இந்தியாவின் ஏற்றுமதி வெகுவாக அதிகரித்துள்ளது.

வர்த்தகம், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், ஏற்றுமதி ஊக்குவிப்பு மன்றங்கள், சரக்கு வாரியங்கள், தொடர்புடைய அமைச்சகங்கள், மாவட்டங்கள் உள்ளிட்ட மாநில அரசுகள், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் ஆகிய அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசின் முழுமையான அணுகுமுறை மூலம், தொழிலாளர்-சார்ந்த பிரிவுகள் உட்பட பல்வேறு துறைகளின் ஏற்றுமதிச் செயல்பாட்டைக் கண்காணிக்க மத்திய அரசு விரிவான கட்டமைப்பை நிறுவியுள்ளது.

மக்களவையில் மத்திய வர்த்தகம், தொழில்துறை  இணையமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா இன்று எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290437&reg=3&lang=1

(Release ID: 2290437)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2290826) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Marathi , हिन्दी