சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹெபடைடிஸ் நோய் தொடர்பாக 21 கோடி பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர், 6 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்: மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல்

प्रविष्टि तिथि: 28 JUL 2026 3:35PM by PIB Chennai

தேசிய வைரல் ஹெபடைடிஸ் கட்டுப்பாட்டுத் திட்டம்  தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று (27.07.2026) உலக ஹெபடைடிஸ் தினம் 2026-ஐ அனுசரித்தது.“ஹெபடைடிசை ஒழிப்போம் வாருங்கள்” என்பது உலக ஹெபடைடிஸ் தினத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், 2018-ஆம் ஆண்டு உலக ஹெபடைடிஸ் தினத்தன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நீடித்த வளர்ச்சி இலக்கின் குறிக்கோள் 3.3-க்கு இணங்க, ஒரு பொது சுகாதார அச்சுறுத்தலாக 2030-ம் ஆண்டுக்குள் வைரல் ஹெபடைடிஸை ஒழிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

இன்றைய நிகழ்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் சிறப்புரையாற்றினார்.  ஹெபடைடிஸ் இல்லாத இந்தியாவை நோக்கிய அரசின் உறுதிப்பாட்டை தனது உரையில் அவர் எடுத்துரைத்ததோடு, இந்த இலக்கை அடைய மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இந்தக் காலகட்டத்தில், தடுப்பு, பரிசோதனை, நோய் கண்டறிதல், சிகிச்சை, தொடர் கண்காணிப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  “ஹெபடைடிஸ் சி-க்கு இலவச சிகிச்சையையும், ஹெபடைடிஸ் பி-க்கான மேலாண்மையையும் வழங்கும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதே நேரத்தில், சேவைகளுக்கான அணுகலையும், மருந்தின் மலிவு விலையையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது” என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “மருந்துகளின் விலை ஒரு டாலருக்கும் குறைவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நோயை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதை எளிதாக்கும் வகையில், தரமான நோய் கண்டறியும் கருவிகள் அதிக அளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன” என்று அவர் மேலும் கூறினார். ஹெபடைடிஸ் நோய் தொடர்பாக 21 கோடிக்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர், 6 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290400&reg=3&lang=1

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2290824) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी